அந்த சுகம்
மீண்டும்
அவளுக்கு வேண்டியிருந்தது
அதனால்
‘உம்’ கொட்டாமலிருந்தாள்.
"தமிழ் ரோஜா "
இப்போது அவன் அழைத்தது
தோடிராகம்.
உம் என்றாள் தமிழ்.
தண்ணீருக்கு நீ பயந்தால்
உன்னைக்கண்டு நீயே
பயப்படுகிறாய் என்று
அர்த்தம்.
“புரியவில்லை.”
உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.
“மெய்யாகவா?”
தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே.
உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்.
“நம்ப முடியவில்லை”
உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான்.
“உடம்பில் ஏன் உப்புநீர்
ஓடுகிறது?”
கடற்கொடை
தாய்தந்த சீதனம்.
முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது
அந்த உறவுத் திரவம்.
No comments:
Post a Comment